புதன், 28 ஏப்ரல், 2010

சர்வதேச மேடைகளில் சார்க் நாடுகள் ஒருமித்து குரலெழுப்ப வேண்டும்

16வது சார்க் உச்சி மாநாட்டை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரை
வெளியில் இருந்து கிடைக்கும் தீர்வுகளை தவிர்க்கும் தைரியம் வேண்டும்
எமது அமைப்பின் பலத்தை குறைத்து மதிப்பிட்டு வருகிறோம்
சர்வதேச மற்றும் பல் தரப்பு அமைப்புகளுடன் செயற்படும் போது எமது வலயத்தின் பொதுவான நன்மை கருதி ஒரே குரலில் பேச வேண்டும். வெளியில் பெறப்படும் தீர்வுகள் எமக்கு ஏற்றவைதானா என்பதை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். எமது வலயத்துக்குள் நாமே மேற்கொள்ளக்கூடிய செயற்பாடுகள் பற்றி கண்டறிய வேண்டும்.
சர்வதேச மேடைகளில் குறிப்பாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன் எமது வலயத்தின் பொதுப் பிரச்சினைகள் பற்றி ஒருமித்த குரலில் பேசும் செயற்பாட்டை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பூட்டானில் நேற்று ஆரம்பமான 16வது சார்க் உச்சி மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரையின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சார்க் நாடுகளுக்கிடையே வலய தொடர்களின் தசாப்தம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பத்தாண்டு காலத்தில் எமது நாடுகள் மற்றும் மக்களிடையிலான தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். அதேவேளை பயங்கரவாதத்துக்கு எதிராக சார்க் கோவையின் விதிமுறைகள் முழுமையாக செயற்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் கண்டறியப்பட வேண்டும்.
வலய அமைப்பு என்ற ரீதியில் சார்க் அமைப்பு தனித்து முன்னேற்றம் காண முடியாது. எனவே நாம் இனங்கண்டுள்ள சில நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புக ளுடன் செயற்பாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெற்காசிய உலகின் பழைமையான மற்றும் சீரிய உரிமைகளின் இருப்பிடமாகும் உலகின் சிறந்த சாஸ்திரவாதிகள், விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள், கலைஞர்கள், கவிஞர்கள் ஆகியோர் இந்த வலயத்தில் இருந்து உருவாகியுள்ளனர்.
சார்க் வலயம் அபிவிருத்தியடைந்துள்ள போதிலும் தெற்காசியாவின் ஒன்றிணைந்த பலத்தை சில சமயங்களில் நாம் குறைத்தே மதிப்பிடுகிறோம். எமது தொழில்நுட்ப திறனையும் எமது வளங்களின் மூலம் அபிவிருத்தி சவால்களுக்கு முகங்கொடுக்கவும், சமூக மற்றும் பாதுகாப்பு நிலையை ஸ்திரப்படுத்தவும் எமக்கு திறமை இருப்பதை சில சமயங்களில் நாம் நினைப்பதில்லை. அதற்கு பதில், வலயத்துக்கு புறம்பாக உள்ள சக்திகளுக்கு முன்னுரிமை வழங்குகிறோம். நாம் செய்ய வேண்டியது அதுவல்ல. எமது வலயத்துக்குள் இருக்கும் அபிவிருத்தி மற்றும் தொடர்புகளை நாம் முதலில் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சார்க் அமைப்பின் தலைமைத்துவத்தை ஏற்றுள்ள இந்த 18 மாத காலத்தில் முக்கியமான பல துறைகளில் வலய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். மின்சாரம், உயர் கல்வி, சிறுவர், போக்குவரத்து, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான ஆறு அமைச்சு மட்ட கூட்டங்கள் எமது நாட்டில் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக 2009 பெப்ரவரியில் இடம்பெற்ற சார்க் வெளிநாட்டமைச்சர்கள் கூட்டத்தில் உலகளாவிய பொருளாதார சீர்கேடு தொடர்பாக வலயத்தின் ஒன்றிணைந்த கூட்டத் தொடர் பற்றி இணை அறிக்கை விடுக்கப்பட்டது.
இலங்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட அந்த நடவடிக்கை வலய அபிவிருத்திக்கான முதல் நடவடிக்கையாகும்.
காலநிலை மாற்றம் இந்த மாநாட்டின் தொனிப் பொருளாக இருப்பது காலேசிதமானதாகும்.
தெற்காசிய பிராந்தியத்தின் பனி யால் சூழப்பட்டுள்ள நேபாளம் மற்றும் பூட்டானியிலிருந்து மாலை தீவு வரையிலான பிராந்தியம் சகல ருக்கும் சம்பந்தப்பட்ட பிரச்சினை யாகும்.
இது தொடர்பான எமது பிராந்தியத்தின் நிலை சர்வதேச மேடைகளில் வலுவாக எழுப்ப வேண்டியது நம் அனைவருக்கும் உள்ள பொறுப்பாகும்.
ஜனநாயக நிர்வாகத்திற்கான எமது முழுமையான அர்ப்பணிப்பு இப்போது எமது முழுப் பிராந்தியத்திற்கும் பொதுவான நடைமுறையாகும்.
இந்தியாவின் பரந்த அபிவிருத்தியுடன் வளர்ச்சி கண்ட எமது பொருளாதாரம், உலகப் பொருளாதார நெருக்கடிக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்தது.
உலகப் பொருளாதாரத்தின் பாதிப்பு இருந்த போதிலும் இலங்கையில் எமக்கு 6% பொருளாதார வளர்ச்சியை எட்ட முடிந்தது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு 1060 டொலராகவிருந்த தனிநபர் வருமானம் இன்று 2050 டொலர் வரை உயர்வடைந்துள்ளது.
பொருளாதார மேம்பாட்டுக்காக நகரத்திற்கு வர வேண்டிய அவசியம் இல்லையென்ற நம்பிக்கையின் அடிப்படையில் நாம் முன்னெடுத்த கொள்கை வெற்றியளித்தது. எனது அரசாங்கம் குடியிருப்பு, குடிநீர் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை நகரத்தில் மாத்திரமன்றிக் கிராமத்தில் மேற்கொண்டது. அதனால்தான் எமது அரசாங்கத்திற்குக் கிராம மக்கள் கூடுதலாக வாக்களித்தனர்.
அரசியல் மறுசீரமைப்பை மேற்கொள்ள எனது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. அதற்கு முன்னதாக நெருக்கடி நிலவிய பகுதிகளில் மக்களுக்குப் புனர்வாழ்வளித்து அவர்களுக்கு ஜீவனோபாயத்தைப் பெற்றுக் கொடுத்து அந்தப் பிரதேசங்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வளங்களைப் பெற்றுக் கொடுக்க எமது அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது.
சார்க் அமைப்பு அதன் வெள்ளி விழா வருடத்தில் கால் பதிக்கின்றது. பூட்டான் பிரதமர் தின்வே இம்முறை இவ்வமைப்பின் தலைவராகியுள்ளார். அவர் தலைமைப்பதவியை வகிக்கும் காலத்தில் அவருக்கு எனது பூரண ஆதரவை வழங்குவேன் என உறுதியளிக்கின்றேன்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் 15வது சார்க் மாநாடு கொழும்பில் நடைபெற்றது. அச்சமயம் எமது நாடு பயங்கரவாதத்துக்கெதிரான சவாலை எதிர்கொண்டிருந்தது.
பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்தை தோற்கடித்துள்ள நாம் தற்போது துப்பாக்கிகளின் சவால்களில்லாத வெளிப்படையான விவாதங்களில் ஈடுபடவும் இணக்கப்பாட்டை காணவும் வாய்ப்புக் கிட்டியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் அமோக மக்கள் ஆணை எமக்குக் கிடைத்துள்ளது. இதனூடாக எமது நாடு, மக்கள் மற்றும் இளைய சந்ததிக்கான எதிர்காலத்தை கட்டியெழுப்ப எமது அயல் நாடுகள் எமக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கும் என்ற நம்பிக்கையுண்டு.
சார்க் அமைப்பானது எமது பிராந்திய நாடுகளின் மக்களினது நலன், சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான அமைப்பாக விளங்குகிறது. கடந்த இரண்டரை தசாப்தங்களாக நாம் கட்டியெழுப்பியுள்ள இணக்கப்பாடுகளே பெரும்
இதன் மூலம் எமது நாடுகள், மக்களுக்கிடையில் நெருங்கிய நல்லுறவை ஏற்படுத்திக் கொள்வது முக்கியமானதாகும்.
1985ம் ஆண்டிலிருந்து படிப்படி யான செயற்பாடுகளுடன் ‘சார்க்’ 25 ஆண்டுகளை எட்டியிருப்பது நாம் பெருமைப்படக் கூடிய தொன் றாகும்.
தற்போது எமது எதிர்கால சந்ததி க்காக எமக்கிடையிலான ஒத்துழைப் புகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது அவசியம்.

யாழ். பொது நூலகத்தை முழுமையாக கணனி மயப்படுத்த அரசு நடவடிக்கை

யாழ். பொது நூலகம் முழுமையாக கணனி மயப்படுத்தப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி நேற்று தெரிவித்தார்.
நாட்டிலுள்ள ஏனைய பொது நூலகங் களுடன் தகவல்களை பரிமாற்றங்களை இலகுவாக மேற்கொள்ளும் வகையில் யாழ். நூலகம் தொடர்புபடுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்திற்கு அமைய யாழ். பொது நூலகம் முழுமையாக கணனி மயப்படுத்தவும் மேலும் நவீன மயப்படுத்தவும் தேவையான சகல வசதிகளையும் அரசாங்கம் மேற்கொண்டு ள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
புனர்நிர்மாணம் செய்யப்பட்ட இந்த நூலகம் 2003ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ம் திகதி மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.
கூடிய தகவல்களை பெற்றுக் கொள்ளும் வகையில் கணனி மயப்படுத்தப்படவுள் ளதுடன் சிறுவர் பகுதியும் அவர்களுக்கு ஏற்றவகையில் கணனி மயப்படுத்தப்ப டவுள்ளது என்றார்.

வடக்கு, கிழக்கு மாகாணத்தில் அதிகளவு கைத்தொழில் பேட்டைகளை நிறுவ திட்டம்

வடக்கு, கிழக்கில் அதிகளவு கைத்தொழில் பேட்டைகளை நிறுவுவதற்கு திட்டமிட்டிருப்பதாக கைத்தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இதற்காக வெளிநாட்டு முதலீ ட்டாளர்களுக்கு விளக்கமளிக்கும் பொருட்டு விரைவில் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் குறிப்பிட்டார்.

கைத்தொழில் துறையை மேம்படுத்துவதன் மூலம் அதிகளவிலான தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க முடியுமென்றும், வேலையற்ற பட்டதாரிகளை இதற்குள் ஈடுபடுத்த முடியுமென்றும் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், முதலீட்டாளர்களை இலங்கைக்கு அழைத்து வந்து முதலீடுகளைச் செய்து, அதன் மூலம் உற்பத்தியாகும் கைத்தொழில் பொருட்களை அம்முதலீட்டாளர்களின் நாடுகளிலேயே சந்தைப்படுத்துவதே எனது இலக்கு.

இதன் மூலம் அதிகளவு அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொள்ள முடிவதுடன், உற்பத்தியாளர்களுக்கு அதிகளவு வருமானத்தையும் ஏற்படுத்திக் கொடுக்க முடியுமென்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, அமைச்சர் றிஷாத் பதியுதீன் முதற் தடவையாக அமைச்சின் கீழுள்ள ஹோமாகம பனாகொடை கைத்தொழில் பேட்டைக்கு நேற்று விஜயம் செய்து அதன் செயற்பாடுகளை பார்வையிட்டார்.

கைத்தொழில் பேட்டை முதலீட்டாளர்கள் மற்றும் தொழிற்சாலையில் கடமையாற்றும் அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடினார். அவர்களின் குறைநிறைகளை கேட்டறிந்த அமைச்சர் அதற்கான பணிப்புரைகளையும் விடுத்தார்.

அமைச்சர் றிஷாத் பதியுதீன் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், கைத்தொழிற் துறையை பொருளாதாரத்தை இலங்கைக்கு ஈட்டித் தரும் துறையாக மாற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணத்தை நனவாக்குவதற்கு அதிகாரிகளும் ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் தனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

உலகின் முன்னணி நாடுகளுடன் இலங்கையும் போட்டியிட்டு வெற்றி கொள்ளும் அளவுக்கு இந்நாட்டை மாற்றியமைப்பதற்கும் எதிர்காலத்தில் சிறந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மத்திய மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் தெரிவில் கட்சிக்குள் குழப்பம்

கண்டி மாவட்ட தலைவர் காதரா? கிரியெல்லவா?


மத்திய மாகாண சபையில் எதிர்க்கட்சியாக விளங்கும் ஐக்கிய தேசியக் கட்சியில் எதிர்க் கட்சித் தலைவர் ஒருவரை தெரிவு செய்வதில் பிரச்சினைகளும் கருத்து முரண்பாடுகளும் தலைதூக்கியுள்ளன.

மத்திய மாகாண சபையில் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த வசந்த அலுவிகார பொதுத் தேர்தலில் மாத்தளை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். இதனால் மத்திய மாகாண சபையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இவ்வெற்றி டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த மத்திய மாகாண சபை உறுப்பினரான கே. கே. பியதாஸவை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கட்சி வட்டாரம் தெரிவிக்கின்றது.

இச்செயல் ஏனைய ஐக்கிய தேசியக் கட்சி மாகாண சபை உறுப்பினர்களிடையே கருத்து முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ள தோடு, மத்திய மாகாண சபையில் நீண்டகால உறுப்பினர்களாக விளங்கும் ஒருவரை கட்சி நியமிக்க வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

எதிர்வரும் மே மாதம் 4 ம் திகதி மத்திய மாகாண சபையின் மாதாந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்திற்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரை ஐ.தே.க. தீர்மானிக்க வேண்டும் என்றும் மாகாண சபை உறுப்பினர்கள் கட்சியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேவேளை, ஐ.தே.க.வின் கண்டி மாவ ட்ட தலைமை யார்? என்பதில் தற்போது கட்சி எம்.பி.க்களான அப்துல் காதர் மற்றும் லக்ஷ்மன் கிரியெல்லவுக்குமிடையில் கருத்துமோதல் வெடித்துள்ளது. கண்டி மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் ஐ.தே.க.வின் சார்பில் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்று முதலிடம் பெற்ற தனக்கே கட்சியின் கண்டி மாவட்ட தலைமை வழங்கப்பட வேண்டுமென்பது காதர் எம்.பி.யின் வாதமாகவுள்ளது.

லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. விருப்பு வாக்கு அடிப்படையில் மூன்றாமிடத்தை பெற்றுள்ளார்.

அவர் உடனடியாக மாவட்ட தலைமைப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய வேண்டுமென்றும் காதர் எம்.பி. வாதிடுகின்றார்.

அத்தோடு, மு.கா. தலைவர் கூட விருப்பு வாக்கினடிப்படையில் என்னிடம் தோல்வி கண்டுள்ளார். அவரும், ஐ.தே.க. மற்றும் இதர விடயங்களில் தன்னிச்சையாக செயற்பட முடியாதென்றும், மக்கள் என்னையே அங்கீகரித்துள்ளனர் என்பதும் காதர் எம்.பி.யின் வாதமாகவுள்ளது.

ஐ.தே.க.வின் முஸ்லிம் தேசிய அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்துள்ள காதர் எம்.பி. தொடர்ச்சியாக கட்சியுடனும், கட்சித் தலைமையுடனும் முறுகல் போக்கையே கடைப்பிடித்து வருகின்றார்.

மக்களுக்கு நன்மை பயக்கும் அரசின் யோசனைகளுக்கு ஐ.தே.க. ஆதரவளிக்கும்

அரசாங்கம் பாராளுமன்றத்தில் முன்வைக்கும் மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய யோசனைகளுக்கு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி முழுமையான ஆதரவு நல்கும் என்று அக்கட்சியின் உபதலைவரும், கம்பஹா மாவட்ட எம்.பி.யுமான கரு ஜயசூரிய நேற்றுத் தெரிவித்தார்.

மக்களுக்கு நன்மை பயக்கக் கூடிய அரசாங்கத்தின் யோசனைகளுக்கு ஆதரவு அளிப்பது என்பதில் நாம் உறுதியாகவுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார். அஸ்கிரிய, மல்வத்த பீடாதிபதிகளிடம் நேற்று ஆசி பெற்றுக்கொண்ட கரு ஜயசூரிய எம்.பி ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், நாடு சிறந்த ஜனநாயகக் குடியரசாக விளங்குவதற்கு நாம் முழுமையான பங்களிப்பை அளிப்போம். இதற்காக அரசாங்கம் முன்னெடுக்கின்ற வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு நன்குவோம்.

பாராளுமன்ற தெரிவுக்குழுக்களினதும், பாராளுமன்ற ஆலோசனைக் குழுக்களினதும் செயற்பாடுகளுக்கும் முழுமையாக ஆதரவு அளிப்போம்.

சார்க் மாநாட்டையொட்டி திம்பு நகர் விழாக்கோலம்: உச்சி மாநாடு இன்று ஆரம்பம்

ஜனாதிபதி மஹிந்த ஆரம்ப உரை
பூட்டான் தலைநகர் திம்புவில் இன்று (28) ஆரம்பமாகும் 16 ஆவது ‘சார்க்’ உச்சி மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பவுரை நிகழ்த்துகிறார். அதனையடுத்து ‘சார்க்’ அமைப்பின் தலை மைப் பதவியை பூட்டானிய பிரதமர் ஜிக்மி வை தில்லேவுக்குப் பொறுப்பளிப்பார்.
சார்க் மாநாடு இன்று ஆரம்பமாவதை யிட்டுத் திம்பு நகர் கோலாகலமாகக் காட்சியளிக்கிறது. சார்க் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவ டைவதையொட்டி 16வது உச்சி மாநாடு பிரமாண்டமான முறையில் நடைபெறுகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ‘சார்க் கிராமத்திலுள்ள இலங்கை இல்லத்தில் பூட்டான் பிரதமர் தின்லேயைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். பூட்டானுக்கு முதன் முதலாக விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு பூட்டான் மன்னரின் சார்பிலும், மக்களின் சார்பிலும் பிரதமர் தின்லே உற்சாகமான வரவேற்பை தெரிவித்துக்கொண்டார்.
பயங்கரவாதத்தை இல்லாதொழித்துச் சமாதானத்தை ஏற்படுத்தியமைக்காக நன்றி தெரிவித்த பிரதமர் தின்லே, இது பிராந்தியத்தில் அமைதியைப் பலப்படுத்து வதற்கு வழிவகுக்குமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனவரியில் நடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் ஏப்ரலில் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் அடைந்த வெற்றிக்காக ஜனாதிபதிக்குப் பாராட்டுதல்களையும் பூட்டான் பிரதமர் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின்போது உடனிருந்த புதிய பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த பூட்டான் பிரதமர் மக்களின் பேராதரவுடன் நாமல் வெற்றி பெற்றுள்ளதாகவும் எதிர்காலத்தில் இலங்கையில் மாத்திரமன்றி பிராந்தியத்திலும் முக்கிய பங்காற்ற முடியும் என்றும் குறிப்பிட்டார்.
‘சார்க்’ ஆரம்பிக்கப்பட்ட 25 ஆவது ஆண்டில் உச்சி மாநாட்டை நடத்துவதை யிட்டு பூட்டான் பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இதேவேளை, 16 ஆவது உச்சி மாநாட்டில் அவதானிப்பா ளராக ஓர் இடம் கிடைத்துள்ள அமெரிக்கா வின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்க ளுக்கான உதவிச் செயலாளர் ஹாபர் ஒ பிளக்கை, நேற்று மாலை ஜனாதிபதி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
‘சார்க்’ கிராமத்திலுள்ள இலங்கை இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இலங்கையின் எதிர்காலத் திட்டங்கள், இதுவரை அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து ஜனாதிபதி விளக்கியுள்ளாரெனத் தெரிவிக்கப்படுகிறது.

75 மில்லியன் ரூபா செலவில் மட்டக்களப்பு பஸ் நிலையம் அமைக்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய, “மஹிந்த சிந்தனை கிழக்கின் உதயம்” நெக்டெப் வேலைத்திட்டத்தின் கீழ் 75மில்லியன் ரூபா செலவில் மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையம் மீள் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்வு எதிர்வரும் 01.05.2010 கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்தரகாந்தனின் பிரதான பங்குபற்லுடன் மட்டக்களப்பு மாநகர முதல்வர் திருமதி.சிவகீத்தா பிரபாகரன் தலைமையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, பூ.பிரசாந்தன், மட்டக்களப்பு அரச அதிபர் சு.அருமைநாயகம், நெக்டெப் திட்ட கிழக்கு மாகாண பணிப்பாளர் திரு.ளு.ஆ.குறூஸ், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி.க.பத்மராஜா ஆகியோரின் பங்குபற்றலுடன் நடைபெறவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகச் செயலாளர் ஆ.தேவராஜன் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 27 ஏப்ரல், 2010

அரசின் கணக்கு வாக்கெடுப்புக்கு ஐதேக கடும் எதிர்ப்பு

வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிப்பதற்குத் திராணியற்ற அரசாங்கம், நாட்டின் ஒட்டுமொத்த மக்களை ஏமாற்றி, மீண்டும் ஒரு கணக்கு வாக்கெடுப்பை நடத்துவதற்கு முயற்சித்து வருகின்றது. நம்பிக்கைத் துரோகமான இத்தகைய முயற்சியைக் கண்டிக்கின்ற அதே வேளை நாடாளுமன்றத்தில் எதிரணிகளை இணைத்துக் கொண்டு தமது எதிர்ப்பினை வெளிக்காட்டப் போவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

அதேவேளை, இதுவரை காலமும் ஏமாற்றப்பட்டு வந்த மக்கள் மீண்டும் ஏமாற்றப்படுவதானது பயங்கரமானதும் கவலைக்குரியதுமானது என்று தெரிவித்துள்ள ஜே.வி.பி. மக்களின் எதிர்பார்ப்புக்களையும் அவர்களது கனவுகளையும் சிதறடிக்கும் வேலைத் திட்டமே இந்த கணக்கு வாக்கெடுப்பாகும் என்று கூறியுள்ளது.

2010ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படாத நிலையில் கடந்த நவம்பர் மாதத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் கணக்கு வாக்கெடுப்பு ஒன்றையே நடத்தியது.

புதிய அரசாங்கம் அமைத்ததன் பின்னர் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் என்று கூறப்பட்ட போதிலும் மீண்டும் கணக்கு வாக்கெடுப்பையே நடத்தப் போவதாகவும் எதிர்வரும் நவம்பர் மாதத்தின் பின்னர் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கவிருப்பதாகவும் அரசாங்கத் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி.யான தயாசிறி ஜயசேகர கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

"அரசாங்கம் மீண்டும் மீண்டும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பது பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் எமக்கு கவலை அளிக்கின்றது. யுத்தம் உக்கிரமடைந்திருந்த கால கட்டத்தில் மக்கள் வயிற்றை இறுக்கிக் கொண்டு நாட்களைக் கடத்தி வந்தனர். யுத்தம் நிறைவடைந்ததும் நிம்மதியடைய முடியும் என்றும் நிவாரணங்களுடனான சக வாழ்வைக் கொண்டு நடத்த முடியும் என்ற அபிலாஷையிலும் திளைத்திருந்தனர்.

ஆனாலும் அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாடுகளும் மக்களை ஏமாற்றமடையச் செய்கின்ற அதேவேளை, ஒருவித விரக்திக்குள்ளும் தள்ளிவிட்டுள்ளது. உண்மையில், மக்கள் படும் துன்பங்களை வேதனைகளை அரசாங்கம் கண்டு கொள்ளாதிருப்பதே வேதனையளிக்கின்ற விடயமாகும்.

உறுதி உடைக்கப்பட்டு விட்டது

2010ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்குப் பதிலாக இடைக்கால கணக்கு வாக்கெடுப்பை நடத்திய அரசாங்கம் புதிய அரசு அமையப் பெற்றதும் புதிய வரவு செலவுத் திட்டம் ஒன்று சமர்ப்பிக்கப்படும் என்று உயரிய சபையான நாடாளுமன்றத்தில் வைத்து உறுதியளித்திருந்தது.

அந்த உறுதிப்பாட்டை அரசாங்கமே இன்று உடைத்து எறிந்துள்ளதைக் காண முடிகின்றது. 2010ஆம் ஆண்டில் 5 மாதங்களைக் கடந்தாவது நிவாரணம் கிடைக்கும் என்றும் சம்பள அதிகரிப்புகள், விலைவாசி குறைத்தல், ஊக்குவிப்பு உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கப் பெறும் என்றும் எதிர்பார்த்திருந்த மக்களுக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே.

மீண்டும் ஒரு கணக்கு வாக்கெடுப்பை முன்வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதன் மூலம் 2010ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தையும் அதனால் கிடைக்கப் பெறுகின்ற நன்மைகளையும் இல்லாது செய்வதற்கே அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது நிராகரிக்கப்பட வேண்டியதும் அதே போல் சகல தரப்பினராலும் கண்டிக்கப்பட வேண்டியதுமான செயற்பாடாகும். இதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

எதிர்த்துப் போராடுவோம்

வரவு செலவுத் திட்டத்தைக் கூட தயார் செய்து கொள்வதற்கான தகுதியும் திராணியும் இன்றைய அரசாங்கத்திற்கு இல்லை என்பது இன்று தெளிவாகியுள்ளது. அது மட்டுமல்லாது அரசாங்கத்தை கொண்டு நடத்துவதற்கான நிதி வருமானம் இல்லை என்பதும் புலனாகியுள்ளது.

நாடாளுமன்றத்தில் 144 ஆசனங்கள் என்ற பெரும்பான்மையைப் பெற்றிருந்தாலும் அதனிடம் கொண்டு நடத்துவதற்கான நிதி இல்லை. மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு அவர்களது வருமானத்தை அதிகரிப்பதற்கான உபாயத்தை கண்டறிவதற்கும் வழி தெரியாது தடுமாறும் அரசாங்கமாகவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி திகழ்கின்றது.

எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது பதவிக் காலத்தை பொறுப்பேற்றதன் பின்னரே புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக கூறப்படுகின்றது. அப்படியானால் அந்த வரவு செலவுத் திட்டம் 2011ஆம் ஆண்டுக்கானதேயன்றி 2010ஆம் ஆண்டுக்கானதல்ல.

இதுவே உண்மை.

எனவே சட்டத்துக்கும் ஜனநாயகத்துக்கும் விரோதமான இத்தகைய செயற்பாட்டை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வன்மையாகக் கண்டிப்பதுடன் தமது எதிர்ப்பையும் வெளிக்காட்டுகின்றது.

கணக்கு வாக்கெடுப்பு சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் எதிரணிகள் ஒன்றிணைந்து எமது எதிர்ப்பைத் தெரிவிப்போம்" என்றார்

ஜனாதிபதிக்கு பூட்டானில் அமோக வரவேற்பு _

சார்க் நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பூட்டான் சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தலைமையிலான குழுவை அந்நாட்டு பிரதமர் ஜிக்மி வை தின்லி வரவேற்றுள்ளார்.

இதன் போது விமானநிலையத்தில் ஜனாதிபதிக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதுடன் வீதியோரமாக திரண்ட அந்நாட்டு மக்கள் கொடிகளை அசைத்து வரவேற்றதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று பிற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பூட்டானிய பிரதமருடன் கலந்துரையாடவுள்ளதுடன் பின்னர் திம்புவிலுள்ள அருங்காட்சியகத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஜனாதிபதியுடன் அவரது துணைவியார் சிரந்தி ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், சபாநாயகர் சாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் இணை செயலாளர் சஜின் வாஸ் குணவர்தன ஆகியோர் பூட்டான் சென்றுள்ளனர்.

ஆறாயிரம் பொலிஸாருக்கு தமிழ் மொழிப் பயிற்சி

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் சேவையாற்றும் ஆறாயிரம் பொலிஸாருக்கு தமிழ் மொழி பயிற்சிகளை வழங்க பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

இவ்வாறான பயிற்சி வழங்குவதன் மூலம் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் வாழும் மக்களுக்குத் தேவையான சிறந்த சேவைகளை பொலிஸாரால் வழங்க முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நீர்கொழும்பு கட்டான பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள முதலாவது பொலிஸ் அகடமி பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவினால் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. பொலிஸ் மா அதிபர் மேலும் உரையாற்றுகையில், யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் சேவையாற்றும் பொலிஸாருக்கு இந்த பயிற்சி வழங்கப்படவுள்ளது.

மூன்று மாதங்களுக்கு 300 பேர் என்ற அடிப்படையில் ஐந்து வருடத்திற்கு ஆறாயிரம் பேருக்கு பயிற்சி வழங்கப்படும்.

பொலிஸாரின் தொழில் ரீதியான ஆளுமைகளை மேம்படுத்துவதே பிரதான நோக்கமாகும். இந்த பொலிஸ் அகடமியை இதற்கு உச்ச அளவில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

காளணி பல்கலைக்கழகத்துடன் இந்த பொலிஸ் அகடமியை இணைத்து செயற் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

திங்கள், 26 ஏப்ரல், 2010

மழையுடன் கூடிய காலநிலை தொடரும்

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடரும் மழையுடன் கூடிய காலநிலை மேலும் சில தினங்களுக்குத் தொடருமென வானிலை அவதான நிலையம் தெரிவித்தது.

தென் மற்றும் மேல் மாகாணத்தின் கடற் பகுதியில் 30 கி. மீற்றர் வேகத்துடன் கூடிய காற்று மாலை வேளைகளில் வீசுவதுடன் இதனால் பாரிய கடல் கொந்தளிப்பு எதுவும் ஏற்படாதெனவும் வானிலை அவதான நிலைய உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

தென் மேற்கு பருவக்காற்று காரணமாக மத்திய, வட மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் மாலையில் கடும் காற்று இடியுடன் கூடிய மழை பெய்யும், அத்துடன் மேல் மாகாணம் உட்பட நாட்டின் சில பகுதிகளில் காலை மற்றும் மதிய வேளைகளிலும் இடைக்கிடை மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழை, அதிகரித்து காற்று வீசியபோதும் பாரிய கடல் கொந்தளிப்பு அபாயம் எதுவும் இல்லையெனவும், இடி மின்னல்களின் போது மக்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் வானிலை அவதான நிலைய அதிகாரி மேலும் தெரிவித்தார். (ஸ)

அவசரகாலச் சட்டத்தை ரத்து செய்ய அரசு பரிசீலனை : அமைச்சர் பீரிஸ்

நாட்டில் அவசரகால சட்டத்தை ரத்து செய்வது பற்றி அரசாங்கம் பரிசீலித்து வருவதாக புதிதாகப் பதவியேற்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் அதற்கான கால வரையறை எதனையும் அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நிலவும் மனித உரிமை தொடர்பில் சர்வதேச அரங்கில் தொடர்ந்து அக்கறை செலுத்தப்பட்டு வருகின்றது. இந்தச் சூழலில், அமுலில் இருந்துவரும் அவசர காலச் சட்டமும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டமும் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

விடுதலைப் புலிகளுடனான யுத்தம் தற்போது முற்றுப் பெற்றுவிட்ட நிலையில், நாட்டில் அவசரகாலச் சட்டம் தேவையில்லை என்ற கருத்தும் மேலோங்கி வருகிறது.

மனித உரிமைகள் தொடர்பில் புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள், வெளியுறவு விவகாரங்களில் இலங்கையின் நிலையை முன்னேற்ற உதவும் என்று கருதப்படுகிறது.

நாட்டின் பாதுகாப்பு சூழல் மேம்பட்டுள்ள ஒரு நிலையில், அரசாங்கம் சில பாதுகாப்பு விதிகள் குறித்து மீள்பார்வை செய்துவருவதாகவும், இதன் அடிப்படையில் அரசாங்கம் விரைவில் அறிவிக்கவுள்ள சில திட்டங்கள் சர்வதேச அரங்கில் வரவேற்பைப் பெறும் என்றும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

புதிய அரசின் வெளிவிவகார கொள்கை

நாட்டின் பொருளாதாரமும் வேலை வாய்ப்பும் மேம்படும் வகையில் புதிய அரசின் வெளிவிவகார கொள்கை அமையும் என்று பீரிஸ் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"நாட்டில் இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், மற்ற நாடுகளுடனான நல்லுறவுகளை மேம்படுத்துவதில் முனைந்து செயல்படுவது என்பதுதான் எமது வெளியுறவு கொள்கையின் அடிநாதமாக இருக்கும்.

பூட்டான் தலைநகர் திம்புவில் நடக்கவுள்ள தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் (சார்க்) மாநாடு நடக்கும்போது ஜனாதிபதி இந்தியப் பிரதமரைச் சந்திக்கும் வாய்ப்புள்ளது. இதனை எமது அரசாங்கம் வரவேற்கிறது. அதன்போது இருதரப்பு விவகாரங்கள் விவாதிக்கப்படும்.

ஆனாலும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எந்தப் பிரேரணையையும் சார்க் கூட்டத்துக்கு அரசு கொண்டு செல்லவில்லை" என்றார்.

அரசு எதிர்பார்க்கும் அபிவிருத்தி இலக்குகளை வெற்றி கொள்ள ஒத்துழைப்பு வழங்குங்கள்

புதிதாக நியமனம் பெற்ற அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்து
அரசு எதிர்பார்க்கும் அபிவிருத்தி இலக்குகளை வெற்றி கொள்ள அமைச்சுக்களின் செயலாளர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கு பங்களிப்பு செய்வதன் மூலம் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற அமைச்சு செயலாளர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சு செயலாளர்களிடம் வேண்டிக் கொண்டார்.
புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்களை ஜனாதிபதி நேற்று (25) மாலை அலரி மாளிகையில் சந்தித்து அவர்களுக்கான பதவிக் கடிதங்களை கையளித்தார். அதன்பின் அவர்களிடம் உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
ஜனாதிபதி மேலும் கூறியதாவது:-
குறிப்பிட்ட ஒரு பிரதேசத்துக்கு அல்லது மாவட்டத்துக்கு என்று மட்டும் இல்லாது நாட்டின் அனைத்து மக்களினதும் நலன் பேணல் நடவடிக்கைகளில் செயற்படுவது அமைச்சுக்களின் செயலாளர்களின் பொறுப்பாகும்.
குறிப்பாக அபிவிருத்தியடையாத பிரதேசம் அல்லது மாவட்டம் தொடர்பாக அதிக அக்கறை காட்டி அப் பிரதேசங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அதேவேளை தத்தமது அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பாக மாதம் ஒரு முறை கூட்டம் நடத்தி அவற்றை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுப்பதும் முக்கியமானதாகும்.
மிகப் பெரிய மக்கள் நம்பிக்கையுடன் அரசாங்கம் பெற்ற மக்கள் ஆணைக்கு ஏற்ப நாட்டை கட்டியெழுப்பும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தி நாட்டை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சுக்களின் செயலாளர்களை ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

உலகின் சிறந்த மழை நீர் முகாமைத்துவம் இலங்கையில்

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா
உலகின் மிகச் சிறந்த மழை நீர் முகாமைத்துவ திட்டம் சீனாவிலேயே உள்ளது. இந்த திட்டத்தை இலங்கையிலும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படு கிறது.
மழை நீரில் 40 சத வீதத்தையே இலங்கை பயன்படுத்துகிறது. 60 சத வீதம் வீணாக்கப்படுவதாக நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறுகிறார். உலகின் மிகச் சிறந்த மழை நீர் முகாமைத்துவ திட்டம் சீனாவில் உள்ளது.
அதனை இலங்கையிலும் அறி முகப்படுத்தவுள்ளோம்.
25 ஏக்கருக்கு மேற்பட்ட வாவிகள் மற்றும் குளங்களே மத்திய அரசுக்கு சொந்தமானவை.
மற்றவை மாகாண சபைகளின் பொறுப்பில் உள்ளன.
எனினும் மாகாண சபைகளின் பொறுப்பில் உள்ள வாவிகளை பொறுப்பாக நட த்திச் செல்ல மாகாண சபைகளிடம் போதிய வளங்களோ நிதியோ இல்லை. இதனால் சிறிய வாவிகள் மற்றும் குளங்களின் அபிவிருத்தி வேலைகள் தாமதமாகின்றன. இது ஒரு பாரிய பிரச்சினையாகும். எனவே சிறிய வாவிகள் மற்றும் குளங்களை அபி விருத்தி செய்வதற்கு மாகாண சபைகளுக்கு உதவுவதற்கு நடவடி க்கை எடுக்கப்படும் என்று அமை ச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் கூறினார்.

16வது சார்க் உச்சி மாநாடு


புதனன்று ப+ட்டானில் ஆரம்பம்
ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான குழு இன்று பயணம்
16 வது சார்க் உச்சி மாநாடு நாளை மறுதினம் பூட்டான் தலைநகரான திம்புவில் ஆரம்பமாகிறது. இம்மாநாட்டில் கலந்து கொள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை தூதுக்குழு இன்று பூட்டான் புறப்பட்டுச் செல்கிறது.
சார்க் அமைப்பின் வெள்ளி விழா ஆண்டு இதுவாகும். அமைப்பின் முதலாவது உச்சிமாநாடு பங்களாதேஷ் தலைநகரான டாக்காவில் 1985 டிசம்பரில் நடைபெற்றது. 16 வது உச்சி மாநாடு நாளை மறுநாள் பூட்டானில் ஆரம்பமாகிறது. பூட்டான் உச்சிமாநாட்டை பொறுப்பேற்று நடத்துவது இது முதல் முறையாகும்.
சார்க் அமைப்பின் தலைமைப் பதவியை தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வகித்து வருகின்றார்.
16 வது உச்சி மாநாட்டை தலைமை வகித்து நடத்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கு புறம்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் தனிப்பட்ட ரீதியில் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
உச்சி மாநாட்டு நிகழ்வுகளில் வெளிநாட்டமைச்சர்களின் பேச்சுவார்த்தை மற்றும் ஏனைய செயற்பாடுகளில் இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் பங்குபற்றுவார். வெளிநாட்டமைச்சர் பதவிக்கு நியமிக்கப்பட்ட பின் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் பங்குபற்றும் முதலாவது நிகழ்வு இதுவாகும். தனது பூட்டான் விஜயத்துக்கு முன்பதாக ஊடகவியலாளர்களை அமைச்சர் பீரிஸ் நேற்று சந்தித்தார்.
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு கட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் இலங்கை மேற்கொண்ட செயற்பாட்டு அணுகுமுறையை இதே போன்ற பிரச்சினையை எதிர்நோக்கும் ஏனைய பிராந்திய நாடுகள் பாடமாக எடுத்துகொள்ளலாம். இலங்கையின் அணுகுமுறை ஏனைய பல நாடுகளுக்கு நல்லதொரு படிப்பினையாக அமையும் என்று ஊடகவியலாளர்களிடம் அமைச்சர் பீரிஸ் கூறினார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது,
சார்க் அமைப்பு உண்மையிலேயே மக்கள் மையப்படுத்தப்பட்ட அமைப்பாக உருவாக வேண்டிய காலம் வந்து விட்டது. இந்நிலையில் கடந்த 25 வருடங்களுக்கு பின்னரான தற்போதைய நிலையை பற்றி ஆராய சார்க் அமைப்புக்கு இது நல்லவொரு சந்தர்ப்பமாக அமைகிறது.
எதிர்கால சவால்கள், மாற்றப்பட வேண்டிய விடயங்கள், பிராந்திய சேவைக்காக முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய விடயங்கள் ஆகியவை பற்றி தற்போது ஆராயலாம்.
தமது நலன் பேணுவதற்கு சார்க் அமைப்பு நேரடியாக தொடர்புள்ளது என்று பிராந்திய மக்கள் நினைக்கும் அளவுக்கு அமைப்பின் செயற்பாடுகள் அமைய வேண்டும். பொருளாதார நடவடிக்கை மூலம் கிடைத்த லாபங்களை அனைத்து தரப்பினரிடையிலும் சமமாக பகிர்ந்தளிப்பதில் பிராந்திய நாடுகள் அதிக அக்கறை காட்டவேண்டும்.
அத்துடன் பிராந்திய நாடுகளுக்கு தேவையேற்படும் நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வளங்களை சேமித்தல் மற்றும் சூழல் விவகாரங்கள் பற்றி தீர்க்கமாகப் பேசப்படவேண்டும். இந்த வகையில் இலங்கை அண்மையில் அரசியல் மற்றும் இராணுவ ரீதியில் பெற்றுக்கொண்ட வெற்றிகள் தொடர்பான அனுபவங்களை பகிர்ந்துகொள்ள உச்சி மாநாட்டை ஒரு மேடையாக பயன்படுத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் குறிப்பிட்டார்.

ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

உணவு விஷமானதில் மட்டக்களப்பில் 12 பேர் வைத்தியசாலையில்

மட்டக்களப்பு ஏறாவூர் சதாம் உசைன் கிராமத்தில் உணவு விஷமானதில் இரண்டு சிறுவர்கள் உட்பட 12 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏறாவூரில் நடைபெற்ற விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட 3 ஆண்களும் 2 சிறுவர்களும் 7 பெண்களும் ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கிறார்.

சனி, 24 ஏப்ரல், 2010

மூன்று தசாப்த காலத்திற்குப் பின்னர் நாட்டில் ஸ்திரமான பாராளுமன்றம்

மூன்று தசாப்த காலத்திற்குப் பின்னர் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய ஸ்திரமான ஒரு பாராளுமன்றம் அமைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சிரேஷ்ட அமைச்சர்கள் தெரிவித்தனர்.

1977ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஸ்திரமான அரசாங்கத்தை நடத்தக் கூடிய அரசியல் சூழல் இருக்கவில்லை என்று கூறிய அவர்கள், இப்போது நாட்டின் எதிர்காலத்திற்கென சிறந்ததோர் பாராளுமன்றம் உருவாகியுள்ளதாகத் தெரிவித்தனர்.

யுத்தத்திற்குப் பின்னரான இந்த மாற்றத்திற்கு மத்தியில், ஐக்கிய இலங்கைக்குள் தீர்வொன்றைக் காண விரும்புவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளமை நல்லதோர் அணுகுமுறையாகுமென்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் சம்பந்தன் ஆற்றிய உரை அவர்களின் அரசியல் செல்வழியில் புதிய அணுகுமுறையைப் புலப்படுத்துவதாக அமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சிறுபான்மை அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார் த்தை நடத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். சந்திப் புக்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஐ.ம.சு. முன்னணியின் தலைவர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அமைச்சர் அழகப்பெரும குறிப்பிட்டார்.

பூட்டானில் நடைபெறவுள்ள 16ஆவது ‘சார்க்’ உச்சிநாட்டில் கலந்துகொண்டுவிட்டு ஜனாதிபதி நாடு திரும்பியதும் இந்தச் சந்திப்பு நடைபெறும் என அமைச்சர் கூறினார். சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவாரென எதிர்பார்க்கப்படுகிறது. அந்தச்சந்திப்புக்குப் பின்னர் இலங்கையில் சிறுபான்மை அரசியல் கட்சிகளுடன் ஜனாதிபதி நடத்தும் சந்திப்பு முக்கியத்துவமிக்கதாக இருக்குமென சுட்டிக்காட்டப்படுகிறது.

இதேவேளை, நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் யாழ் மாவட்ட தமிழர் ஒருவர் பாராளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தலைவராகத் தெரிவாகியிருப்பது ஒரு முக்கிய அரசியல் திருப்புமுனையாகுமென்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.

“1931ஆம் ஆண்டின் முதலாவது சட்ட சபையில் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த வைத்தியலிங்கம் துரைசாமி சபாநாயகராக இருந்தார். அதன் பின்னர் 1965 முதல் 1970 ஆண்டு வரை உடுப்பிட்டி தொகுதியைச் சேர்ந்த மு. சிவசிதம்பரம் பிரதி சபாநாயகராகவிருந்தார். அதற்குப் பின் தற்போது 40 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்திரகுமார் முருகேசு குழுக்களின் பிரதித் தலைவர் பதிவிக்குத் தெரிவாகியுள்ளார். இது ஒரு நாள் அரசியல் மாற்றம்” என்றும் அமைச்சர் விபரித்தார்.

நாட்டின் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தனிப் பெரும்பான்மையுடன் ஓர் அரசியல் கட்சிக்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளமை சிறந்த எதிர்காலத்திற்கு வழிவகுக்குமென்றும் முன்னணியின் தலைவர்கள் தெரிவித்தனர்.

அமைச்சர்கள் டலஸ் அழகப்பெரும, மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா, டபிள்யூ. டி. ஜே. செனவிரட்ன ஆகியோரே இந்தக் கருத்துகளைத் தெரிவித்தனர்.

தமிழரசுக் கட்சி உட்பட சகல கட்சிகளுடனும் பேச டக்ளஸ் முடிவு

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஆரம்பமாகக் கொண்டு தமிழ் மக்களுக்கான தீர்வு பெற்றுக்கொள்வதற்காக இலங்கை தமிழரசுக் கட்சி உட்பட சகல கட்சிகளுடனு பேசவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று தெரிவித்தார்.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நேற்று இஸிபத்தான மாவத்தையிலுள்ள சமூக சேவைகள் அமைச்சில் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினார். இச்செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஒரு நடைமுறைச் சாத்தியமான இறுதித்தீர்வை நோக்கிச் செல்லும் ஆரம்பமாகவே இது அமையும்.

தமிழரசுக் கட்சியின் சில உறுப்பினர்கள் என்னுடன் தனிப்பட்ட முறையில் பேசியிருக்கிறார்கள். எனினும் உத்தியோகபூர்வமாக சகல கட்சிகளுடனும் பேசி பொது இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். அவரவர்களுடைய தனிப்பட்ட கருத்துக்கள், கொள்கைகள் இருக்கலாம். எனினும் ஆரம்பம் ஒன்றாக இருக்க வேண்டும்.

தமிழர் மத்தியில் ஒருமித்த ஒற்றுமை இல்லை. தென்னிலங்கை தட்டிக்கழித்து விடக்கூடாது. அதற்கு ஏற்றாற்போல் நாம் செயற்பட வேண்டும்.

கடந்த காலங்களில் எமக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களையெல்லாம் தவறவிட்டு விட்டோம். இனியும் அவ்வாறு நடைபெறாமல் சந்தர்ப்பங்களை பயன்படுத்த முயற்சிப்போம். நாம் இழந்தவைகள் இனியும் போதும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்தார்.

ஐ.தே.கவிலிருந்து விலக கண்டி மாவட்ட எம்.பி.அப்துல் காதர் தீர்மானம் _

ஐ. தே. க. முஸ்லிம் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து ராஜினாமாச் செய்ய கண்டி மாவட்ட எம்.பி. ஏ. ஆர். எம். அப்துல் காதர் முடிவு செய்துள்ளதாக அரச இணையத்தள செய்திகள் தெரிவிக்கின்றன.

கட்சியில் அவர் வகிக்கும் ஏனைய பதவிகளிலிருந்தும் ராஜினாமாச் செய்யத் தாம் தீர்மானித்துள்ளதாக அவர் கூறியதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

மேலும்,

ராஜினாமாக் கடிதங்களை அடுத்துவரும் ஓரிரு தினங்களுக்குள் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக அப்துல் காதர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

"கண்டி மாவட்டத்தில், பொதுத் தேர்தலில் ஐ. தே. க. சார்பில் மூன்று முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்த வேண்டாமென்று கட்சித் தலைவரிடம் வேண்டுகோள் விடுத்தேன்.

ரவூப் ஹக்கீமை கண்டியில் நிறுத்த வேண்டாம் என்றும் சுட்டிக்காட்டினேன். சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மை இதன்மூலம் தோற்றம் பெறும் என்ற உண்மையையும் விபரித்தேன்.

ஆனால், அவர் எனது கருத்தை ஏற்கவில்லை. மூன்று முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதன் மூலம் முஸ்லிம்கள் மீது நம்பிக்கையற்ற தன்மை இன்று சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

கட்சியின் முஸ்லிம் தேசிய அமைப்பாளர் என்ற வகையில் எனது கருத்தை கட்சித் தலைவர் ஏற்கவில்லை. அதனால் பொம்மையாக அப்பதவியில் இருக்க நான் தயாரில்லை. 21 வருடமாக ஐ. தே. க. எம்.பியாக இருந்த எனக்கு இப்போது கட்சியின் மீது நம்பிக்கையின்மை ஏற்பட்டுவிட்டது.

கடந்த காலங்களில் சிங்கள மக்களின் வாக்குகள் சுமார் 40,000 வரை எனக்குக் கிடைத்து வந்துள்ளது. இந்த முறை 10,000 வாக்குகளே எனக்குக் கிடைத்தன. சிங்கள மக்கள் முஸ்லிம்கள் மீது நம்பிக்கையற்றுப் போனமையே இதற்குக் காரணம்.

அதுமட்டுமன்றி முஸ்லிம்களும், மூன்று முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் வாக்களிக்கவில்லை. முஸ்லிம் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு வித்தியாசம் இதற்குச் சான்று.

முஸ்லிம் – சிங்கள மக்கள் மத்தியிலான இந்த மனப்போக்குக்குக் காரணம் ஹக்கீம் கண்டியில் போட்டியிட்டதே. அது மட்டுமன்றி ஹக்கீம் போட்டியிடாமலிருந்தால் ஐ. தே. க. 5 ஆசனங்களைப் பெற்றிருக்கும். கட்சிக்கு ஆசனம் குறைந்ததற்கும் ஹக்கீமே காரணம்.

ஐ. தே. க. தனக்குக் கிடைத்த தேசியப் பட்டியலையும் பொருத்தமாக செய்யவில்லை. கட்சித் தலைமை எதேச்சதிகாரமாக செயற்பட்டுவிட்டது.

கொழும்பு முஸ்லிம்களுக்காக முன்னாள் எம்.பி. மஹ்ரூபை தேசியப் பட்டியல் மூலம் நியமித்திருக்க வேண்டும். கட்சிக்காக நிறைய அர்ப்பணிப்புக்களைச் செய்தவர் அவர்.

மு. காவுக்கு இரண்டு பேரை வழங்கியதைக் கண்டிக்கின்றேன். இதில் ஒன்றை மஹ்ரூபுக்கு வழங்கியிருக்க முடியும்" என்றார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வசம் நான்கு அமைச்சுப் பொறுப்புகள் உள்ளன.





பாதுகாப்பு, நிதித் திட்டமிடல், துறைமுக விமானசேவைகள், பெருந்தெருக்கள் ஆகிய நான்கு துறைகளுக்குமான அமைச்சுப் பொறுப்புகளே இவையாகும்.

இதேவேளை தமிழர் ஒருவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பொறுப்பும் இருவருக்கு பிரதியமைச்சுப் பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு வழங்கப்பட்டுள்ளதுடன் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களான விநாயகமூர்த்தி முரளிதரன் மீள் குடியேற்ற பிரதியமைச்சராகவும் முத்து சிவலிங்கம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பிரதியமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா ஊடகத்துறை பிரதியமைச்சராக நியமனம் பெற்றுள்ளார்.

பிரதி அமைச்சர்கள்:

1. சாலிந்த திசாநாயக்க - பெருந்தோட்ட கைத்தொழில்

2. டிலான் பெரேரா - பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள்

3. சுசந்த புஞ்சி நிலமே - கடற்றொழில், நீரியல் வள அபிவிருத்தி

4. லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன - பொருளாதார அபிவிருத்தி

5. சந்ரசிறி கஜதீர -நிதி, திட்டமிடல்

6. ஜகத் புஷ்பகுமார - விவசாயம்

7. டி. பி. ஏக்கநாயக்க - கல்வி

8. மஹிந்த அமரவீர - சுகாதாரம்

9. ரோஹித அபேகுணவர்தன - துறைமுகம், விமான சேவைகள்

10. எஸ். எம். சந்ரசேன - நீர்ப்பாசனம், நீர்வள முகாமைத்துவம்

11. குணரத்ன வீரக்கோன் - தேசிய மரபுரிமை, கலாசாரம்

12. மேர்வின் சில்வா - தகவல், ஊடகத்துறை

13. பண்டு பண்டாரநாயக்க - சுதேச வைத்தியத்துறை

14. ஜயரத்ன ஹேரத் - கைத்தொழி, வர்த்தகம்

15. தயாஸ்ரீ த திசேரா - துறைமுகம், விமான சேவைகள்

16. துமிந்த திசாநாயக்க - தபால், தொலைத் தொடர்புகள்

17. ரஞ்சித் சியம்பலாபிட்டிய - பொருளாதார அபிவிருத்தி

18. லசந்த அலகியவன்ன - நிர்மாணத்துறை பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொதுவசதிகள்

19. ரோஹண திசாநாயக்க - போக்குவரத்து

20. எச். ஆர். மித்ரபால - கால்நடை அபிவிருத்தி

21. நிர்மல கொத்தலாவல - பெருந்தெருக்கள்

22. பிரேமலால் ஜயசேகர - மின்சக்தி, மின்வலு

23. கீதாஞ்சன குணவர்தன - வெளிவிவகாரம்

24. விநாயகமூர்த்தி முரZதரன் - மீள்குடியேற்றம்

25. இந்திக்க பண்டாரநாயக்க - உள்ளூராட்சி, மாகாண சபைகள்

26. முத்து சிவலிங்கம் - பொருளாதார அபிவிருத்தி

27. சிறிபால கம்லத் - காணி, காணி அபிவிருத்தி

28. டபிள்யூ. பீ. ஏக்கநாயக்க - இடர் முகாமைத்துவம்

29. சந்ரசிறி சூரியாரச்சி - சமூக சேவைகள்

30. நியோமல் பெரேரா - கூட்டுறவு உள்நாட்டு வர்த்தகம்

31. சரத் குணரத்ன - அரச வளங்கள், தொழில் முயற்சி

32. நந்திமித்ர ஏக்கநாயக்க - உயர்கல்வி

33. நிருபமா ராஜபக்ஷ - நீர்வழங்கல், வடிகாலமைப்பு

34. லலித் திசாநாயக்க - தொழில்நுட்பம், ஆராய்ச்சி

35. சரண குணவர்தன - எரிபொருள் துறை

36. ரெஜினோல்ட் குரே - நீதி

37. விஜித் விஜயமுனி சொய்சா - புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு

38. எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா - சிறுவர் அபிவிருத்தி, மகளிர் விவகாரம்

39. வீரக்குமார திசாநாயக்க - பாரம்பரிய கைத்தொழில், சிறுகைத்தொழில் அபிவிருத்தி

அமைச்சரவை அமைச்சர்கள் :

1. பிரதமர் தி.மு. ஜயரத்ன - புத்தசாசனம், மதவிவகாரம்

2. ரட்ணசிறி விக்ரமநாயக்க - அரச முகாமைத்துவம், மறுசீரமைப்பு

3. நிமல் சிறிபால டி சில்வா - நீர்ப்பாசனம், நீர்வள முகாமைத்துவம்

4. ஏ.எச்.எம். பெளஸி - இடர் முகாமைத்துவம்

5. மைத்திரிபால சிறிசேன - சுகாதாரம்

6. சுசில் பிரேம ஜயந்த - எரிபொருள் தொழிற்துறை

7. தினேஷ் குணவர்தன - நீர்வழங்கல், வடிகாலமைப்பு

8. டக்ளஸ் தேவானந்தா - பாரம்பரிய கைத்தொழில், சிறுகைத்தொழில்

9. ஏ.எல்.எம். அதாவுல்லா - உள்ளூராட்சி, மாகாண சபைகள்

10. டி.யூ. குணசேகர - புனர்வாழ்வு, சிறைச்சாலை மறுசீரமைப்பு

11. ரிசாத் பதியுதீன் - கைத்தொழில் மற்றும் வர்த்தகம்

12. விமல் வீரவன்ச - நிர்மாணத்துறை, பொறியியல் சேவை, வீடமைப்பு, பொது வசதிகள்

13. பஷில் ராஜபக்ஷ - பொருளாதார அபிவிருத்தி

14. பாட்டலி சம்பிக்க ரணவக்க - மின்சக்தி எரிசக்தி

15. பி. தயாரத்ன - அரசவளங்கள், தொழில் முயற்சி அபிவிருத்தி

16. பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் - வெளிவிவகாரம்

17. டபிள்யூ. டீ. ஜே. செனவிரத்ன - பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள்

18. சுமேதா ஜீ. ஜயசேன - பாராளுமன்ற விவகாரம்

19. மில்றோய் பெர்னாண்டோ - மீள்குடியேற்றம்

20. ஜீவன் குமாரதுங்க - தபால் தொலைத் தொடர்புகள்

21. பவித்ரா வன்னியாரச்சி - தேசிய மரபுரிமைகள், கலாசாரம்

22. அநுர பிரியதர்ஷன யாப்பா - சுற்றாடல்

23. திஸ்ஸ கரலியத்த - சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகாரம்

24. அதாவுட செனவிரத்ன - நீதி

25. காமினி லொக்குகே - தொழில் உறவுகள் திறன் அபிவிருத்தி

26. பந்துல குணவர்தன - கல்வி

27. மஹிந்த சமரசிங்க - பெருந்தோட்ட கைத்தொழில்

28. ராஜித சேனாரத்ன - கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி

29. பியசேன கமகே - சுதேச வைத்தியம்

30. எஸ். பி. நாவின்ன - தேசிய மொழி, சமூக ஒருங்கமைப்பு

31. ஜனக பண்டார தென்னக்கோன் - காணி, காணி அபிவிருத்தி

32. பீலிக்ஸ் பெரேரா - சமூக சேவைகள்

33. சி.பி. ரத்நாயக்க - விளையாட்டுத்துறை

34. மஹிந்த யாப்பா அபேவர்தன - விவசாயம்

35. குமார வெல்கம - போக்குவரத்து

36. டளஸ் அழகப்பெரும - இளைஞர் விவகாரம் வேலைவாய்ப்பு

37. ஜோன்சன் பெர்னாண்டோ - கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தகம்

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்பு




37 அமைச்சர்கள்:
39 பிரதியமைச்சர்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் புதிய அமைச்சரவை நேற்றுப் பதவியேற்றுக் கொண்டது.

புதிய அமைச்சரவையில் 37 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்க ளாகவும் 39 பேர் பிரதியமைச்சர்களாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

இது தொடர்பான உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதற்குத் தலைமை தாங்கினார்.

நண்பகல், சுபவேளையான 1.30 க்கு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் ஆரம்பமான இந்த நிகழ்வில், புதிய பொறுப்புக்களைப் பெற்றுக் கொண்ட அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களும் அவர்களது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

முதலில் அமைச்சர்கள் 37 பேரும் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு ஜனாதிபதி முன் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர். அதன் பின்னர் 39 பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் தனித்தனியாக பதவியேற்பு பிரமாணங்களைச் செய்து கொண்டனர்.

ஆனாலும், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பதவிப் பிரமாணத்திற்கு அழைக்கப்பட்ட போதும் அவர்களுக்குரிய பொறுப்புக்கள் கூறி அழைக்கப்பட வில்லை.

இந்தப் புதிய அமைச்சரவையில் தமிழ், முஸ்லிம்களும் இடம்பெறுகின்றனர். டக்ளஸ் தேவானந்தா, ஏ. எச். எம். பெளஸி, ரிசாட் பதியுதீன், ஏ. எல். எம். அதாஉல்லா ஆகியோர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.

அதேநேரம், முத்து சிவலிங்கம், எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் பிரதியமைச்சர்களாகவும் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.

இந்த அமைச்சரவையில் பல புதுமுகங்களும் இடம்பெறுகின்றன.

தமிழ், முஸ்லிம் அமைச்சர்களில் பாரம்பரிய கைத்தொழில், சிறு தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சராக டக்ளஸ் தேவானந்தாவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக ஏ. எச். எம். பெளஸியும் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சராக ஏ. எல். எம். அதாஉல்லாவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் அமைச்சராக ரிசாட் பதியுதீனும் பதவியேற்றுள்ளனர்.

பிரதியமைச்சர்களில் முத்து சிவலிங்கம் பொருளாதார அபிவிருத்தி பிரதிய மைச்சராகவும் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சராகவும், விநாயகமூர்த்தி முரளிதரன் மீள்குடியேற்ற பிரதியமைச் சராகவும் பதவியேற்றுக் கொண்டனர்.

சத்தியப்பிரமாண நிகழ்வின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய அமைச்சர்கள், பிரதியமைச்சர்களுக்குத் தம் வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பணியில் புதிய அமைச்சர்கள் அர்ப்பணிப் புடனும் பொறுப்புடனும் சேவையாற்ற வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் முப்படைத் தளபதிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். கண்டி மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வர்களுக்கான அமைச்சுப் பொறுப்புக்கள் நேற்றைய தினம் வழங்கப்படவில்லை யென்பதும் குறிப்பிடத்தக்கது. (ஸ)

புதன், 21 ஏப்ரல், 2010

தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள்

1. ரத்னசிறி விக்கிரமநாயக்க

2. டி. எம். ஜயரத்ன

3. டலஸ் அழகப்பெரும

4. பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ்

5. டியூ குணசேகர

6. பேராசிரியர் திஸ்ஸ விதாரன

7.கீதாஞ்சன குணவர்தன

8. எல்லாவல மேதானந்த தேரோ

9. முத்து சிவலிங்கம்

10. அச்சல ஜாகொட

11. விநாயகமூர்த்தி முரளிதரன்

12. ஜே. ஆர். பி. சூரியபெரும

13. ஜனக பண்டார பிரியந்த

14. பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க

15. ஏ. எச். எம். அஸ்வர்

16. மாலினி பொன்சேகா

17. கமலா ரணதுங்க

ஐக்கிய தேசிய கட்சி


1. திஸ்ஸ அத்தநாயக்க

2. ஜோசப் மைக்கல் பெரேரா

3. எரன் விக்கிரமரட்ன

4. கலாநிதி ஹர்ஷா டி சில்வா

5. டி. எம். சுவாமிநாதன்

6. ஆர். யோகராஜன்

7. அனோமா கமகே

8. ஹசன் அலி

9. அஸ்லம் மொஹமட் சாலிம்


ஜனநாயக தேசிய முன்னணி

1. டிரான் அலஸ்

2. அனுர குமார திசாநாயக்க


இலங்கை தமிழரசுக் கட்சி

1. எம். சுமந்திரன்

7வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று


20வது பிரதமராக தி.மு பதவிப் பிரமாணம்

இலங்கையின் 20வது பிரதமராக தி. மு. ஜயரட்ன நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இது தொடர்பான உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று மாலை 6.30 மணியளவில் அலரிமாளிகையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள், இராஜதந்திரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டதோடு புதிய பிரதமருக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

இதேவேளை, பிரதமர் தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவிப்பிரமாணம் செய்து கொள்ளுமென உத்தியோகபூர்வ வட்டாரங்கள் கூறின.

40 பேரைக் கொண்ட இந்த அமைச்சரவை ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலம் வரை இருக்குமென சு.க. செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இதற்கிடையில், இலங்கையின் ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 8.45க்கு ஆரம்பமாகிறது.

இலங்கையின் 20வது பிரதமராக பதவியேற்றுக்கொண்ட டி. எம். ஜயரட்ன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்ட 225 உறுப்பினர்களும் இன்று புதிய பாராளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொள்வர். அதற்கு முன்னதாக சபாநாயகர் தெரிவு இடம்பெறும். சபாநாயகராக தெரிவு செய்யப்படும் உறுப்பினர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார். அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு இடம்பெறும்.

குழுக்களின் பிரதித் தலைவர், ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு பிரதம கொரடா, அவைத் தலைவர் போன்றோரின் தெரிவுகளும் அதனைத் தொடர்ந்து இடம்பெறும். நடந்து முடிந்த பொதுத் தேர்தல்மூலம் ஏழாவது பாராளுமன்றத்துக்கு தெரிவான 196 உறுப்பினர்களும், தேசியப் பட்டியல் மூலம் தெரிவான 29 உறுப்பினர்களுமாக 225 பேரும் இன்று பாராளுமன்றத்துக்கு வருகை தரவுள்ளனர்.

குறிப்பாக ஐ.ம.சு.மு., ஐ.தே.க., ஐ.தே.கூ., இ. தமிழரசுக் கட்சி ஆகியவற்றில் புது முகங்களாக சுமார் 70 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை 8.45க்கு நடைபெறும் பாராளுமன்ற அமர்வுகளின் பின்னர் சபை எதிர்வரும் மே 4ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படவுள்ளது.

தனியார் பஸ்களில் பிச்சை எடுத்தல், வியாபாரம் செய்தல் மே 1 முதல் தடை

மே மாதம் முதலாம் திகதி முதல் தனியார் பஸ்களில் பிச்சை எடுப்பதும் வியாபாரம் செய்வதும் முற்றாகத் தடை செய்யப்படவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன நேற்று கூறினார்.

இந்த முடிவு குறித்து பொலிஸ் மா அதிபரையும் போக்குவரத்து அமைச்சையும் அறிவூட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பஸ்ஸினுள் பிச்சை எடுப்பதாலும் வியாபாரம் செய்வதாலும் பயணிகளுக்கு பல்வேறு அசெளகரியங்கள் ஏற்படுவதாகக் கூறிய அவர், பஸ்களில் பிச்சை எடுப்பதன் மூலம் 4 ஆயிரம் ரூபா முதல் 5 ஆயிரம் ரூபா வரை ஒரு பிச்சைக்காரர் வருமானம் ஈட்டுவதாகவும் கூறினார்.

பிச்சை எடுப்பதன் பின்னணியில் சில கும்பல்கள் இயங்குவதாகவும், இதனை தடுப்பதன் மூலம் குறித்த கும்பல்களால் அச்சுறுத்தல்கள் ஏற் படலாம் என்றும் கூறிய அவர், அது தொடர்பில் பொலிஸாரின் உத வியை நாட உள்ளதாகவும் தெரிவித் தார்.

ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளை

இலங்கையின் ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளை 22ஆம் திகதி நடைபெறவுள்ளது.

நாளை காலை 9.30க்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகிறது. சபையின் முதலாவது நடவடிக்கையாக சபாநாயகர் தெரிவு இடம்பெறும். சபாநாயகராகத் தெரிவு செய்யப்படும் நபர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் ஏழாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட 225 உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொள்வர்.

இதனைத் தொடர்ந்து பிரதி சபாநாயகர் தெரிவு, குழுக்களின் பிரதித் தலைவர் தெரிவு, ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு பிரதம கொரடா, அவைத்தலைவர் தெரிவுகள் இடம்பெறும். நாவலப்பிட்டி மற்றும் திருகோணமலை கும்புறுப்பிட்டி பகுதிகளில் நடைபெற்ற மீள் வாக்குப் பதிவுகளின் பின்னர் இன்று வெளியிடப்படும் தேர்தல் முடிவுகளின் பின்னர் ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு, மற்றும் தேசியப் பட்டியல்கள் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள 225 உறுப்பினர்களும் நாளை பாராளுமன்றம் செல்கின்றனர்.

இவர்களுள் சுமார் 70 பேர் வரையில் புது முகங்களாக உள்ளனர்.

இதுவரை கிடைத்துள்ள தேர்தல் முடிவுகளின்படி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் இன்று தேர்தல் ஆணையாளரிடம் கையளிக்கப்படவுள்ளது.

தமக்குக் கிடைத்த வாக்குகளின் படி கிடைக்கவுள்ள தேசியப்பட்டியல் தொடர்பாக இலங்கை தமிழரசு கட்சி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாகக் கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் அறிவித்துள்ளார்.

எனினும், ஐ. தே. க. தேசியப் பட்டியல் விவகாரத்தில் இழுபறி நிலையிலேயே உள்ளது. அத்துடன் ஐ. தே. க.- ஜனநாயக தேசியக் கூட்டமைப்புக்கு இடையே எதிர்க்கட்சித் தலைமை பொறுப்பு ஏற்பது தொடர்பாக இழுபறி நிலை தொடர்கிறது. (ள)

திருகோணமலை தேர்தல்

இலங்கையில் மறுவாக்குப்பதிவை அடுத்து இதுவரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி திருகோணமலை தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசுக்கட்சி முன்னிலை பெறுகின்றது. அடுத்த இடத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும், அதனையடுத்த இடத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் இருக்கின்றன.

இருந்தபோதிலும், திருகோணமலை மாவட்டத்துக்கான ஒட்டுமொத்த முடிவுகளின்படி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பே அங்கு ஆகக்கூடுதலான வாக்குகளை பெற்றுள்ளது.

அதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு அந்த மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களும், இலங்கை தமிழரசுக்கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு ஆசனமும் கிடைத்துள்ளன.

இலங்கையில் தேர்தல் முறைகேடுகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட இரு பகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்புகள் இன்று நடந்து முடிந்திருக்கின்றன.

திருகோணமலை மாவட்டத்தின் கும்புறுப்பிட்டிப் பகுதி மற்றும் கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டிப் பகுதி ஆகிய இடங்களிலேயே இன்று வாக்குப் பதிவு நடந்திருக்கின்றது.

கும்புறுப்பிட்டியில் ஒரு வாக்களிப்பு நிலையத்திலும், நாவலப்பிட்டியில் முப்பதியேழு வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிப்பு நடந்தது.

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றைப் பொறுத்தவரை, தேர்தல் முறைகேடுகள் காரணமாக மறுவாக்குப் பதிவு நடப்பது இதுதான் முதல் தடவையாகும்.

இந்த இரு இடங்களிலும் மறு தேர்தல் நடப்பதால், நாடாளுமன்ற தேசிய பட்டியல் ஆசனங்களுக்கான ஒதுக்கீடுகள் ஒத்திவைக்கப்பட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த இரு இடங்களிலும் இன்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தவுடன் திருகோணமலை மற்றும் கண்டி மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

ரணில் - ஜனாதிபதி இன்று சந்திப்பு _

எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை 9.30 மணியளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது முக்கியமாக புதிய நாடாளுமன்றத்தில் சபாநாயகரை தெரிவு செய்வது குறித்து கலந்துரையாடப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு

பொன்சேகா சபை அமர்வுகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும் : இராணுவத் தளபதி _

இராணுவ நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் ஜெனரல் சரத் பொன்சேகா, நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படும் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

பொன்சேகா நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பது தொடர்பில் நாடாளுமன்ற நிர்வாகம் விடுக்கும் கோரிக்கைகளின் அடிப்படையில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கச் செய்த பின்னர், மீண்டும் தடுப்புக் காவலில் வைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக ஏழு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், அந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் இரண்டு இராணுவ நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், விசாரணைகள் நடைபெறும் சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு அவருக்குத் தடையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவை நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு வழி சமைக்குமாறு ஜனநாயக தேசியக் கூட்டணி, நாடாளுமன்றப் பதில் செயலாளர் நாயகத்திற்கு அண்மையில் கடிதம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்

மட்டு. படுவான்கரை பஸ்சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஹிஸ்புல்லாஹ்

மட்டகளப்பு பஸ் சாலை ஊழியர்களின் வேலை பகிஷ்கரிப்பால் முற்றாகத் நிறுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு படுவான்கரைப் பகுதி பஸ் சேவைகளை உடனடியாக மீள ஆரம்பிக்குமாறு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம், ஹிஸ்புல்லாஹ் இலங்கை மத்திய போக்குவரத்து சபைத் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த பஸ் சேவை நிறுத்தத்தையடுத்து படுவான்கரைப் பகுதிகளுக்கான வவுணதீவு, கரவெட்டி, உன்னிச்சை ஆகிய பகுதியின் மக்கள் மட்டகளப்பு நகரில் இருந்து தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்ல பெரிதும் சிரமப்படுகின்றனர்.

போக்குவரத்து வசதியின்றி பிரதான பஸ் நிலையத்தில் பல மணி நேரம் தாம் காத்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்விடம் அவர்கள் முறையிட்டதையடுத்து, அவர் போக்குவரத்துச் சபைத் தலைவரை கொழும்பில், அவரது தலைமையகத்தில் சந்தித்து, குறித்த பஸ் சேவைகளை உடனடியாக மீள ஆரம்பிக்குமாறு கேட்டுள்ளதாக அரச ஊடகப்பிரிவுத் தெரிவிக்கின்றது.

அதேவேளை, இச்சந்திப்பின் போது மட்டக்களப்பு பஸ் சாலை ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலை பகிஷ்கரிப்பினை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய போக்குவரத்துச் சபையிடம் அவர் கேட்டுள்ளதாக அரச ஊடகப்பிரிவு மேலும் தெரிவிக்கின்றது.

திங்கள், 19 ஏப்ரல், 2010

உலக பொருளாதார நெருக்கடியை இலங்கை வெற்றிகரமாக கையாண்டது

அண்மையில் சர்வதேச அளவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய உலகப் பொருளாதார நெருக்கடியை இலங்கை வெற்றிகரமாக கையாண்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

இலங்கை கைத்தொழில் மற்றும் வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செயலமர்வு கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற செயலமர்வில் ‘உலக நிதி நெருக்கடியிலிருந்து கற்றுக்கொண்ட அத்தியாயங்கள்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்துகையிலேயே அஜித் நிவாட் கப்ரால் இவ்வாறு தெர்வித்தார.

கடந்த வருடம் உலகளாவிய ரீதியில் பாரிய நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதனால் நிதி நிறுவனங்களும் சந்தைகளும் பாரிய பின்னடைவைச் சந்தித்ததுடன் சில வங்கிகளும் நிறுவனங்களும் மூடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

பொருளாதார நெருக்கடியைப் பொறுத்தவரையில் உலகின் எந்த மூலையில் பொருளாதார நெருக்கடி ஏற்பாட்டாலும் உடனடியாக உலகளவில் அதன் பாதிப்புகள் பிரதிபலிக்கும். அந்தவகையில் கடந்த வருடம் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியில் இலங்கையும் சிக்கியிருந்தது. ஆனால் அதனை நாம் புத்திசாதுர்யமாக எதிர்கொண்டு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சி பெற்றுள்ளோம்.

பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்குரிய திட்டங்களை நாம் முற்கூட்டியே பொதுமக்களுக்கு அறிவித்தோம். அறிவித்த திட்டங்களை அமுல்படுத்தினோம். இதனால் எமக்கு வெற்றிகள் கிடைத்தது. அத்துடன் பொருளாதார பிரச்சினைகளை கையாள்வதற்கு அரசியல் உட்கட்டமைப்பின் ஆதரவும் மிக முக்கியமானது. இலங்கையில் மூன்று தசாப்தகால மோதல்கள் முடிவூக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் வாய்ப்புகள் தற்பொது உள்ளன. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நாம் அபிவிருத்திகாண வேண்டும். கடந்த சில வருடங்களாக இலங்கை சாத்தியமான பொருளாதார வளர்ச்சியைக் கண்டு வந்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமெனவூம் திரு அஜித் நிவாட் கப்ரால் தமது உரையில் மேலும் குறிப்பிட்டார்.
நன்றி ஜனாதிபதி இணையம்

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க திட்டம்

யாழ்ப்பாணத்தில் கைத்தொழில் துறையை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப் படவுள்ளதாக யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க தெரிவித்தார்.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை மீள ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் பனை, வலை பின்னல், படகு கட்டும் தொழிற் சாலை, கடல்சார் உணவு மற்றும் கைத் தொழில் பேட்டை என்பனவே ஆரம்பிக் கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

காங்கேசன்துறை, சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கான மதிப்பீட்டு அறிக்கை கோரப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் வெகு விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

தென்பகுதியைப் போன்று வடபகுதிக்கும் தேவையான சகல வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்துள்ளதுடன் அதனை மேலும் விஸ்தரிக்கும் வேலைத்திட்டங்களையும் ஆரம்பித்துள்ளது. யாழ். மக்களின் ஜீவனோபாயத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தேவையான சகல உட்கட்டமைப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

குறுகிய காலத்தில் யாழ்ப்பாணத்தில் விவசாயம் மற்றும் மீன்பிடித்துறை பாரிய அளவில் அபிவிருத்தி கண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ

விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் அளிப்பதற்கு வெளிநாடுகளில் இயங்கும் பிரிவினைவாதிகள் மேற்கொள்ளும் முயற்சியை முறியடிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் தயாராக இருக்கவேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புலிகளை மீளக்கொண்டு வந்து அவர்களுக்கு அங்கீகாரத்தை வழங்குவதற்கு சர்வதேச சமூகத்தின் ஒருபகுதியினர் முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியிலேயே பாதுகாப்பு செயலாளர் இதனைக் கூறியுள்ளார்.

கோதாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்திருப்பதாவது;பிரிவினைவாத இயக்கத்தை அடக்குவதும் அதன் பிரசாரத்தை உரிய முறையில் கையாள்வதும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கையின் தந்திரோபாயத்தின் பிரதான அங்கமாக இருக்கவேண்டும். அரசியல் விளைவுகளை பொருட்படுத்தாமல் பிரிவினைவாத உணர்வுகளை மேம்படுத்தும் உள்நாட்டு சக்திகளுக்கு எதிராக புதிய அரசாங்கம் முழு அளவில் செயற்பட வேண்டும்.

பாதுகாப்புத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான புதிய சட்டவிதிகளை அடுத்த பாராளுமன்றம் அறிமுகப்படுத்தவேண்டும். பிளவுபட்ட அரசியலில் ஈடுபடுவதற்கு எதிரணிக் கட்சிகளுக்கோ அல்லது ஆளும் கூட்டணியிலுள்ள பங்காளிகளுக்கோ இடமளிக்கக் கூடாது.

முன்னைய அரசாங்கங்கள் புத்திசாதுர்யமாக செயல்பட்டிருந்தால் புலிகள் 30 வருடங்களாக நீடித்திருக்க முடியாது. இலங்கைக்கு எதிரான புலம்பெயர்ந்த தமிழர்களில் புலிகள் சார்பான பிரிவினர் அதிகளவில் பிரசாரத்தை முன்னெடுத்திருந்தனர். வெளிநாட்டு அரசியல்வாதிகளின் மனதை வென்றெடுக்க உலகத் தமிழர் பேரவை ஆதரவு தேடியது. இந்த நிலைமையை வெளிப்படுத்துவதாக பிரிட்டனில் இடம்பெற்ற உலகத்தமிழர் பேரவையின் சந்திப்பில் பிரிட்டனின் உயர்மட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகள் கலந்து கொண்டமை காணப்படுகிறது.

எதிரியின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்பு, வெளிவிவகார அமைச்சுகள் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். சர்வதேச மட்டத்தில் எதிரிக்கு நிதி வளங்கள் உள்ளன.பிரிட்டிஷ் தொழில் கட்சிக்குள் இஸ்லாமிய அடிப்படை வசதிகள் ஊடுருவியிருப்பதாக பிரிட்டிஷ் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன. அந்த மாதிரியான உபாயத்தைப் புலம்பெயர்ந்த தமிழர்களும் உள்வாங்கக் கூடும்.

அடுத்த 6 வருடங்களும் மிகவும் முக்கியமானவையாகும். புலிகளின் சகாப்தம் முடிவடைந்த பின்னரான முதலாவது அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. பிரிவினைவாத அச்சுறுத்தலை வேறுபட்ட முறையில் கையாள வேண்டியுள்ளது. ஆயுதங்கள் அவர்களிடம் இல்லாமலிருக்கக் கூடும். ஆனால் அவர்களின் இலக்கு ஒன்றே என்று கூறுவேன்.

யுத்தம் முடிவுக்கு வந்தபோது சிறைப்பிடிக்கப்பட்ட சுமார் 12 ஆயிரம் புலி உறுப்பினர்கள் தொடர்பாகக் கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது. அவர்களில் ஒருபகுதியினர் விடுவிக்கப்பட்டாலும் மீண்டும் அவர்கள் திரட்டப்படும் சாத்தியத்தை முழுமையாக நிராகரித்துவிட முடியாது. பிரிவினைவாதக் கருத்துகளை ஊக்குவிக்கும் ஆபத்துக் குறித்து அரசியல் கட்சிகள் அறிந்திருக்க வேண்டும். தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு புனர்வாழ்வளித்து படிப்படியாகப் புதிய அரசாங்கம் விடுவிக்கவுள்ள நிலையில் பிரிவினைவாத கருத்துகளை ஊக்குவிப்பதன் அபாயம் தொடர்பாக அரசியல் கட்சிகள் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும்

இந்திய தூதுவர் அசோக்

தொப்புள்கொடி உறவைக் கருத்தில்கொண்டு யாழ்ப்பாண அபிவிருத்தியில் இந்தியா அதிக கரிசனை மே 5 இல் விசா அலுவலகம் அங்குரார்ப்பணம்

இந்திய தூதுவர் அசோக் காந்தாயாழ்.குடாநாட்டுக்கும் தமிழகத்திற்கும் இடையில் தொப்புள்கொடி உறவு இருப்பதைக் கருத்தில் கொண்டு யாழ்ப்பாண அபிவிருத்தியில் இந்தியா அதிகளவுக்கு அக்கறை கொண்டிருப்பதாகத் தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா, மே 5 ஆம் திகதி முதல் இந்திய விசா வழங்கும் அலுவலகம் திறந்து வைக்கப்படவிருப்பதாகவும் அறிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான சர்வதேச வர்த்தக கண்காட்சியில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா தமது உரையில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.இந்தப் புதிய அலுவலகம் அங்கு திறக்கப்பட்டதும் குடாநாட்டு மக்கள் விசா விண்ணப்பங்களை அங்கு பெற்றுக்கொண்டு திரும்பக் கையளிக்க முடியும்.கொழும்புக்குப் பயணம் செய்வதற்குப் பதிலாகத் தமது விண்ணப்பங்களை யாழ்ப்பாண அலுவலகத்திலேயே இனிமேல் சமர்ப்பிக்கக் கூடியதாக இருக்கும். யாழ்ப்பாணத்தில் உட்கட்டமைப்பின் அபிவிருத்தியில் இந்தியா கூடுதல் அக்கறை கொண்டிருப்பதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் அஷோக் கே.காந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கண்காட்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது;

இலங்கையும் இந்தியாவும் நீண்ட கால நட்புறவைக்கொண்ட நாடுகள். குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கும் இந்தியாவின் தமிழகத்திற்கும் இடையில் தொப்புள்கொடி உறவுகள் இருப்பதால் யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தியில் இந்தியா கூடுதல் அக்கறை கொண்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உட்கட்டுமானங்களை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இந்தியா பல்வேறு வழிகளில் உதவி செய்து வருகிறது.

யாழ்ப்பாணம் பலமான பொருளாதாரக் கட்டமைப்புக்கொண்ட பிரதேசம் என்பதில் எந்தவிதமான ஐயப்பாடும் இல்லை. கடந்த காலங்களில் நடைபெற்ற வன்முறைகளால் யாழ்ப்பாணத்தின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. எனினும் அது மீண்டும் விரைவில் எழுச்சி கண்டு வருகிறது.

வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் மீள்கட்டுமானம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி தொடர்பாக இந்தியா கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. வடபகுதிக்கான தண்டவாளங்களை அமைக்கும் பணிகளில் இந்தியா இலங்கைக்கு உதவி வழங்கவுள்ளது.

மதவாச்சியிலிருந்து தலைமன்னாருக்கும் மதவாச்சியிலிருந்து கே.கே.எஸ்.க்கும் இடையிலான புகையிரத மார்க்கங்களை அமைப்பதற்கு இந்தியா உதவி வழங்கும். அது மாத்திரமன்றி காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி மற்றும் பலாலி விமான நிலையப்புனரமைப்புக்கு இந்தியாவின் உதவி வழங்கப்படும்.

இன்னும் சில வருடங்களில் யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவின் ராமேஸ்வரத்திற்கு மீண்டும் படகுச்சேவைகள்,விமானச்சேவைகள் மற்றும் புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படவேண்டும் என்பதே எனது விருப்பமாகவுள்ளது.

இந்த அபிவிருத்திப்பணிகளை இந்தியா,இலங்கை அரசம்ங்கத்துடனும் உள்ளூர் நிறுவனங்களுடனும் இணைந்து செய்ய விருப்பதால் உள்ளூர் நிறுவனங்களிலுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் .

அத்துடன், மோதல்கள் முடிவடைந்த பின்னர் இலங்கையின் வட பகுதியை மீளக்கட்டியெழுப்புவதற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்,இந்திய பாராளுமன்றத்தில் 12.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியிருந்தமையை நினைவு கூர்ந்த அவர், மோதல்களால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வீடுகள் அமைப்பதற்கும் அந்தப் பகுதிகளில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களின் சுகாதார மற்றும் வைத்திய சேவைகளுக்கும் இந்தியா உதவி வழங்கும் என்றும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் மே 5 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இந்தியா விசா வழங்கும் உதவி நிலையமொன்று திறந்துவைக்கப்பட விருப்பதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் தனது உரையில் அறிவித்தார்.

இதுவரை இந்தியாவுக்கான விசாவிற்கு விண்ணப்பிப்பதாயின் கொழும்பிற்குச் சென்று விண்ணப்பிக்கவேண்டியநிலை காணப்பட்டபோதும் இனிமேல் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவிருக்கும் கிளையின் ஊடாக விசாவிற்கான விண்ணப்பங்களை அனுப்பி விசாவைப் பெற்றுக்கொள்ளமுடியும்.

யாழ்ப்பாணத்தில் திறக்கப்படவிருக்கும் இந்த அலுவலகத்தின் ஊடாக விசா விண்ணப்பங்கள் மாத்திரமன்றி யாழ்ப்பாணத்தின் வர்த்தக அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று இந்திய உயர்ஸ்தானிகர் அசோக்க.கே. காந்தா மேலும் கூறினார்.

இந்தக் கண்காட்சித் திறப்பு விழாவில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஷ் ,யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா,இலங்கை வர்த்தக சங்கத்தின் உறுப்பினர்கள்,யாழ்.வர்த்தக மற்றும் கைத்தொழில் சங்கத்தின் பிரதிநிதிகள் உட்படப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் இணக்கப்பாட்டுக்குத் தயார்

தமிழ் தேசிய கூட்டமைப்பு தாம் அரசுடன் நெருங்கி உறவாடத்த் தயார் என்று நேற்று திருகோணமலையில் இடம்பெற்ற ஊடக மகாநாட்டில் தெரிவித்தது. அரசாங்கம் நல்லதொரு அரசியல் தீர்வை பிளவுபடாத நாடு ஒன்றினுள் தமிழ் சமூகத்திற்கு கொடுக்குமாயின் தாம் தயார் என அந்த அரசியல் கட்சி நேற்று கொள்கை வெளியிட்டது. எனினும் பழம் பெரும் தலைவர் இரா சம்பந்தன் பத்திரிகையாளரிடம் பேசும் போது அவர்களது கூட்டம் அரச கூட்டத்துடன் பாராளுமன்றத்தில் இணையுமா என்று தெளிவாக குறிப்பிடவில்லை

இந்திய விஸா நிலையம் மே 5 முதல் யாழில் இயங்கும்

இந்திய விஸா நிலையம் மே 5 முதல் யாழில் இயங்கும்

இந்திய விஸா நிலையமொன்று எதிர்வரும் மே மாதம் முதல் யாழ் ப்பாணத்தில் இயங்கவுள்ளது. இந்த நிலையம் மே மாதம் 5ம் திகதி திறந்து வைக்கப்படும் என்று இலங்கைக்கான இந்தியாவின் தூது வர் அசோக் கே. காந்த் நேற்று தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், மத்திய கல்லூரி யில் நடைபெறும் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சியை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். யாழ். குடா நாட்டு மக்கள் இந்த நிலையத்தில் விஸா விண்ணப்பப்படிவங்களைப் பெற்றுக் கொள்ளவும், அவற்றைக் கையளிக்கவும் முடியும். இதன்படி விஸாவைப் பெற்றுக் கொள்ள மாத்திரமே கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகரால யத்திற்கு செல்ல வேண்டும் என்று தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அரசியலில் கூடுதல் அனுபவம், தகுதி உள்ளவர்களுக்கே அமைச்சர்கள் நியமனத்தில் முன்னுரிமை வழங்கப்படும் ஜனாதிபதி


புதிய அமைச்சரவையில் 35 முதல் 38 பேர் அமைச்சர்களாகப் பதவிவகிப்பர். நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப் பட்டுள்ளவர்களில் கூடுதல் தகுதி, அனுபவம் மற்றும் திறமையுள்ளவர்களே அமைச் சர்களாகச் சேர்த்துக்கொள்ளப்படுவர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இத்தக வலைத் தெரிவித்துள்ளார். "திவயின' சிங்கள நாளிதழுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இப்படிக் கூறியுள்ளார். சிரேஷ்ட மற்றும் தகுதியானவர்களுக்கே அமைச்சர் நியமனத்தில் முன்னுரிமை வழங்கப்படும். அமைச்சர்களை நியமிக்கு முன்னர் சிரேஷ்ட உயர் அரச அதிகாரி களின் கருத்துக்கள் கேட்கப்படும். அந்தக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டும் அமைச்சர் நியமனம் வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் விவகாரங்களில் தேர்ச்சி பெறுவது மிகவும் முதன்மையான அவசியமான தேவை என்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கினார். அமைச்சர்கள் நியமனத்தின்போது அரசியலில் கூடுதல் அனுபவம் உள்ளவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருப்பத்தைக் கேட்டு அதனடிப்படையில் சபாநாயகர் பதவிக்கு வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவார் என்றும் ஜனாதிபதி சொன்னார். புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி நாளை ஞாயிற்றுக்கிமை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அலுவல்களில் நிபுணத்துவம் வாய்ந்த ஒருவர் புதிய எம்பிக்களுக்கு விளக்கவுரை நிகழ்த்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சனி, 17 ஏப்ரல், 2010

தேயிலையின்



தேயிலைக் கொள்வனவை அதிகரிக்க ஈரான் முடிவு : இலங்கைக்கான தூதுவர் தெரிவிப்பு _

இலங்கையிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் தேயிலையின் அளவை 30 மில்லியனில் இருந்து 50 மில்லியன் கிலோவாக அதிகாரிக்க ஈரான் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இலங்கைக்கான ஈரான் தூதுவா ரஹீம் ஹோஜி இத்தகவலைத் தெரிவித்ததாக அரச இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான விசேட பேச்சுவார்த்தை ஒன்றை அவர் பெருந்தோட்டத்துறை அமைச்சர் டி. எம். ஜயரட்னவுடன் நடத்தியுள்ளார். இலங்கை சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்கும் ஈரான் அரசாங்கம் உதவி வழங்கும் என்று ஈரானியத் தூதுவர் இந்தப் பேச்சுவார்த்தையின் போது தெரிவித்துள்ளார் என்று அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ___
Newer Post Older Post Home

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை குரங்கு என்று கூறிய ஆஸ்திரேலியாவின் இளம் அரசியல்வாதி


மெல்போர்ன்:அமெரிக்க அதிபர் ஒபாமாவை குரங்கு என்று விமர்சித்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அரசியல்வாதி நிக் சோவ்டன் சர்ச்சையை ஏற்ப்படுத்தி உள்ளார். அங்குள்ள குவீன்ஸ்லாந்து தேசிய விடுதலைக் கட்சியின் இளைஞர் பிரிவு உறுப்பினர் இந்த சோவ்டன். இவர் தனது ட்விட்டர் தளத்தில், ஒபாமாவை விமர்சித்து எழுதியுள்ளார்.

பாரக் ஒபாமாவின் பேட்டி ஏபிசி டிவியில் ஒளிபரப்பானது. ஒபாமாவை கெர்ரி ஓ பிரையன் என்ற நிருபர் பேட்டி கண்டு கொண்டிருந்தார். அந்த சமயத்தில் தனது ட்விட்டர் தளத்தில் இப்படி எழுதினார் சோவ்டன்.ஒரு குரங்கை பேட்டி எடுக்க வேண்டுமானால் படகை எடுத்துக் கொண்டு டரோங்கோவுக்குப் போயிருக்கலாம். அதை விட்டு விட்டு ஏன் கெர்ரியை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார்கள் என்று தெரியவில்லை என்று கூறியிருந்தார் சோவ்டன்.இன்னொரு செய்தியில், நான் குரங்கைப் பார்க்க விரும்பினால் வன விலங்குகள் குறித்த சானலைப் பார்த்துக் கொள்வேன் என்று கூறியிருந்தார்.

இந்த சோவ்டனுக்கு வயது வெறும் 22 தான். கிரிபித் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வருகிறார். இவர் இப்படி இனவெறியுடன் எழுதியிருப்பது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. அவரை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று அவரது கட்சிக்குள் பலத்த குரல் கிளம்பியுள்ளது. இதையடுத்து சோவ்டன் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.தனது ட்விட்டர் செய்தி குறித்து விளக்கியுள்ளார் சோவ்டன். அவர் கூறுகையில், அது ஒரு ஜோக். என்னைப் பற்றித் தெரிந்தவர்கள் இதைப் புரிந்து கொள்வார்கள் என்றார் சோவ்டன்.
Read more...

சீமானின் கண்டனம்.


இந்தியாவில் வந்தேறிகள் எல்லாம் சுகவாழ்வு வாழ்கிறார்கள். ஆனால் ஒரு வயதான தமிழ்த் தாய்க்கு அனுமதி மறுக்கிறார்கள். தமிழர் மீதான துவேஷம் இது" என இயக்குநரும் நாம் தமிழர் அமைப்பின் தலைவருமான சீமான் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கை:

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தாய் பார்வதி அம்மாள் தனது உடல் நலம் குன்றியதால் சிகிச்சை பெறுவதற்காக முறைப்படி விசா பெற்று இந்தியாவிற்கு வந்தவரை கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் ஈவிரக்கமின்றி மத்திய மாநில அரசுகள் திருப்பி அனுப்பியுள்ளன. உரிய அனுமதி பெற்று வந்த ஒருவரை தடுத்த இது மனிதாபிமானமற்ற செயல் மட்டுமல்ல சட்ட விரோத செயலுமாகும்.

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சிறுவனுக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய இந்தியா உதவியது என்று புகைப்படம் எடுத்து உலகுக்கு தங்கள் மனிதாபிமானத்தை வெளிச்சமிட்டுக்காட்டுபவர்கள் இதில் இரட்டை வேடம் இடுவது ஏன்? யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகுக்கெல்லாம் பாடிச்சென்ற எம் பாட்டன் வாழ்ந்த மண்னில் இன்று இந்த மண்ணிற்குத் தொடர்பில்லாத இத்தாலியர் தொடங்கி மார்வாடி குஜராத்தி, மலையாளி, தெலுங்கர்கள் வரை அனைவரும் உல்லாச வாழ்வு வாழ்கையிலும் அதிகாரத்தில் இருக்கையிலும் எங்கள் அன்னையின் உடல் நலத்திற்கு சிகிச்சை பெற இந்த மண்ணில் அனுமதி மறுக்கப்படுகின்றது என்பது எவ்வளவு பெரிய வெட்கக்கேடான ஒன்று?

பிரபாகரனின் தாயாரை மனிதாபிமானமற்று திருப்பி அனுப்பியதன் மூலம் மத்திய மாநில அரசுகள் தமிழருக்கு எதிரான தங்கள் செயல்களைத் தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கின்றன என்று மீண்டும் ஒருமுறை நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.இந்த மனிதாபிமானமற்ற சட்ட விரோத செயலுக்கு நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்..." என்று கூறியுள்ளார்
Read more...

தமிழ் தேசிய கூட்டமைப்பு


மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து செயல்பட திட்டம்.
அரசியல் தீர்வு முயற்சிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டே இரு தரப்பு பிரதிகளும் இணைந்து செயற்பட வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டதாக ரவூப் ஹக்கீம் கூறினார். தமிழ்,மக்களின் அதிகபட்ச ஆதரவைப் பெற்றுள்ள கட்சிகள் என்ற வகையில் இரண்டு கட்சிகளுக்கும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய தார்மீக பொறுப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.