புதன், 5 மே, 2010

வெளிநாட்டில் பணிபுரிவோர் நலன்:

சமூக பாதுகாப்பு நிதியம் ஆரம்பிக்க வெளிநாட்டு பணியகம் நடவடிக்கை
வெளிநாடுகளில் பணிபுரியும் பணியாளர்களின் நலன்களைப் பேணவும் அவர்களின் தொழில்களைப் பாதுகாக்கவும் என சமூக பாதுகாப்பு நிதியமொன்றை ஆரம்பிக்க இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக பணியக சட்டம் கடந்த வருடம் திருத்தப்பட்டதோடு நிதியம் அமைப்பது தொடர்பிலுள்ள சட்ட நிலைமைகள் குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் சட்ட மா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளது.
தற்பொழுது அமுலிலுள்ள வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கான காப்புறுதித் திட்டத்திற்கு மேலதிகமாகவே இந்த நிதியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியத்தினூடாக கூடுதல் நன்மைகளைப் பெற்றுக் கொடுக்கவும் அவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் சட்ட, சமூக பிரச்சினைகளுக்கு உதவி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: