செவ்வாய், 4 மே, 2010

மக்கள் எதிர்பார்த்த புதிய ஐதேக நாளை உதயமாகும் : கயந்த கருணாதிலக

ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைப்பது தொடர்பாக கட்சியின் செயற்குழு நாளை கூடவுள்ளது. பெரும்பாலும் மக்கள் எதிர்பார்த்த புதிய ஐக்கிய தேசியக் கட்சியை மே மாதம் ஐந்தாம் திகதிக்கு பின்னர் எதிர்பார்க்கலாம் என ஐ.தே.க. வின் பேச்சாளர் கயந்த கருணாதிலக எம்.பி. தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,


"கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைக்க வேண்டும் என்ற கருத்துகள் அனைத்து தரப்பினராலும் முன் வைக்கப்பட்டன.

இதற்குப் பிரதான காரணம் அண்மையில் இடம்பெற்ற இலங்கையின் ஏழாவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர் தெரிவின் போது, பொது மக்கள் ஐ.தே.முவின் புதிய, இளைய வேட்பாளர்களைக் கூடுதலாக ஆதரித்திருந்தமையாகும்.

இதற்கு அமைவாக ஐ.தே.கவினை மறுசீரமைக்க கட்சி உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதுடன் இது தொடர்பாக இறுதிக்கட்ட தீர்மானங்களை எடுக்க ஐ.தே.கவின் செயற்குழு உறுப்பினர்கள் நாளை புதன்கிழமை மாலையில் கட்சியின் தலைமையகமான சிறிகோத்தாவில் கூடவுள்ளனர்.

இக் கூட்டத்தில் கட்சியின் சிரேஷ்ட பதவிகளில் மாற்றங்கள் கொண்டு வருவது தொடர்பாகவும் மக்களின் கட்சி மீதான நம்பிக்கையை கட்டியெழுப்புவது தொடர்பாகவும் கூடிய அவதானம் செலுத்தப்படவுள்ளது.

எவ்வாறாயினும் பொது மக்களின் எதிர்பார்ப்புக்கு அமைவாக புதிய பொழிவுடன் ஐக்கிய தேசியக் கட்சி விரைவில் அறிவிக்கப்படும்" எனக் கூறினார். ___ E-mail to a friend

கருத்துகள் இல்லை: